1 2 3 4 5

நல்வரவு

சீர்காழி சட்டமன்ற தொகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி மக்களின் கோரிக்கைக்கு இணங்க மாண்புமிகு முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் ஆசியுடன், தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 19.06.2017 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை விதி 110ன் கீழ் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் புதிதாக இருபாலர் பயிலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2017-2018ஆம் கல்வியாண்டில் துவங்கப்படும் என்று ஆணை பிறப்பித்தார். அதன்படி 02.08.17 அன்று சீர்காழி வட்டம் புத்தூர், சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஓ.எஸ்.மணியன் அவர்களால் இக்கல்லூரி, B.A. தமிழ் B.A. ஆங்கிலம், B.Com., B.Sc., கணிதம், மற்றும் B.Sc., கணினி அறிவியல் ஆகிய 5 பாடப்பிரிவுகளுடன் தற்காலிகக் கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் சீ.சுரேஷ்குமார் அவர்கள், தஞ்சாவூர் மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் முனைவர் க.மனோகரன் அவர்கள், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆர்.கே.பாரதிமோகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.வி.பாரதி அவர்களின் பெருமுயற்சியால் தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில் தற்காலிகக் கட்டிடம் ஒன்றில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.  


இக்கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டப்படுவதற்காக சீர்காழி வட்டம் புத்தூர், சீனிவாசா சுப்பராயா அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் 4.26.0 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான திட்டம் மற்றும் வரைபடம் பொதுப்பணித்துறையினால் தயாரிக்கப்பட்டு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. புதிய கட்டிட கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி பெறுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.