Photo Galery (2022)



"சுய சுகாதாரம்" பற்றி பெண்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம்

சீர்காழி புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் "சுய சுகாதாரம்" பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி மகளிர் குழுமம் சார்பாக நடைபெற்றது. நிகழ்வின் முதலாவதாக குத்துவிளக்கு ஏற்றி துவங்கப்பட்டது. கணிததுறை உதவி பேராசிரியர் முனைவர் இரா.சாந்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கி.விஜயலட்சுமி அவர்கள் தலைமை உரை வழங்கி பேசுகையில் மாணவிகள் சுகாதாரமாக இருக்க வேண்டும் மேலும் கிராமங்கள் இருக்கக்கூடிய மக்களிடமும் சுகாதாரத்தை பற்றிய விழிப்புணர்வு மற்றும் தூய்மையாக இருத்தல் வேண்டும் என்ற கருத்துக்கள் எல்லாம் கூறினார். நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கடலூர் அரசு மருத்துவக் கல்லூரி (RMMCH) உதவி பேராசிரியர் மருத்துவர் M.நித்யா சக்தியநாராயணன் அவர்கள் விழிப்புணர்வு சிறப்புரை வழங்கி பேசுகையில் மாணவிகள் தங்களின் ஆரோக்கியத்திற்காக நல்ல சத்தான உணவுகளை உண்ண வேண்டும் என்றும், பெண்கள் தொடர்பான நோய்களை அறிந்து அதை எவ்வாறு குணப்படுத்த வேண்டும் என்ற யுத்திகளை எல்லாம் கையாள வேண்டும் என்றும், மாணவிகள் சிறிய வயதில் தவறான பாதையில் செல்லாமல் இருக்கவும் மேலும் தங்களை தற்காத்துக் கொள்ளவும் பல்வேறு கருத்துக்கள் நிறைந்த அறிவுரை வழங்கினார். இந்நிகழ்வில் 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ்த்துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அனுஷ்யா தொகுத்து வழங்கினார். நிகழ்வில் மற்ற துறை தலைவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர் கலந்து. இறுதியாக வணிகவியல் உதவி பேராசிரியர் முனைவர் வே. மகேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்.




தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு குறித்து ஒரு நாள் கருத்தரங்கம்

சீர்காழி, புத்தூர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு குறித்து ஒரு நாள் பயிற்சி கருத்தரங்கம் 12.10.2022 நடைபெற்றது. கருத்தரங்கை கல்லூரியின் தொழில் முனைவோர் மற்றும் மேம்பாடு மையம் ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் வணிகவியல் துறை தலைவர் முனைவர் மு.திருநாராயணசாமி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இதைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் கி.விஜயலட்சுமி அவர்கள் தலைமையுரை வழங்கி பேசுகையில் தொழில் முனைவோர் முக்கியத்துவம் மற்றும் மேம்பாடு பற்றியும் இக்காலத்தில் தொழில் எவ்வாறு அவசியம் என்ற கருத்துகளை எல்லாம் பேசினார். கருத்தரங்கில் அண்ணாமலை பல்கலைக்கழக தொழில் முனைவோர் மைய ஒருங்கிணைப்பாளர் திரு.விக்னேஷ் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோர் மேம்பாட்டிற்கு அரசு எடுக்கும் நடவடிக்கைகளும் அதன் திட்டங்களையும், எந்தெந்த தொழிலுக்கு என்னென்ன விதிமுறைகளை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்றெல்லாம் பேசினார். நிகழ்வில் பல்வேறு துறை சார்ந்த தொழில் முனைவோர் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர்களும் உடற்கல்வி இயக்குனர் மேலும் 296 மாணவ மாணவிகளும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை தமிழ் துறை கௌரவ விரிவுரையாளர் முனைவர் அனுசியா தொகுத்து வழங்கினார். இறுதியாக வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் T.குமார் நன்றியுரை வழங்கினார். நிறைவாக கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றும் எங்களுக்கும் தொழில் தொடங்க ஆசை வந்துவிட்டது என்றும் அரசு கொடுக்கக்கூடிய சலுகைகளை நாங்கள் பின்பற்றுவோம் என்றும் மாணவ மாணவிகள் நன்றி கூறி விடைபெற்றனர்.



75வது சுதந்திர தினவிழா (2022)


நாற்பெரும் விழா - 2022

பட்டமளிப்பு விழா - 2022


கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று 20.04.2022 நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.விஜயலட்சுமி அவர்கள் தலைமை ஏற்று விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சசிகுமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் முனைவர் எம்.செல்வம் அவர்கள் 180 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி மாணவ மாணவிகள் தங்கள் வாழ்வில் இன்னும் பல உயரிய பட்டங்களை பெற வேண்டும், "எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின்" என்ற திருவள்ளுவர் குறளுக்குஏற்ப வாழ்க்கையில் பல உச்ச நிலைகளை அடைய வேண்டும் என்று வாழ்த்தி பேசினார். இதில் கல்லூரி பேரவை பொறுப்பாசிரியர் முனைவர் திருநாராயணசாமி, வணிக நிர்வாகிகவியல் துறைதலைவர் முனைவர் குமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரியா, உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரபாகரன், நூலகர் முனைவர் சுப்பிரமணியன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.


முத்தமிழ் விழா - 2022


சீர்காழி புத்தூரில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முத்தமிழ் விழா 21.04.2022 நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.விஜயலட்சுமி அவர்கள் தலைமைதாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தமிழ்த்துறைத் உதவிப் பேராசிரியர் முனைவர்.ஜெகதீசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். கோவை அவிநாசி பல்கலைக்கழகத்தின் முன்னாள் இசைப் பேராசிரியர் முனைவர் ராச கலைவாணி அவர்கள் மற்றும் அவர்களின் புதல்வி செல்வி ஏழிசை பாவை ஆகியோர் சிறப்பு விருந்தினராக வருகை தந்தனர். அவர்தம் உரையில் தமிழ் தொன்மையான மொழி, இன்றும் இளமையாக விளங்குகிறது. இசை எளிமையாக அனைவரிடத்திலும் சென்றடைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச்சிந்தில் இருந்து பல பாடல்களை எடுத்து தொழிலாளிகள்கூட புரிந்து கொள்ளும் வகையில் பாரதியார் பாடல் அமைத்தார் அதுபோல, இசை அடித்தட்டு மக்களை சென்றடைய வேண்டும் என கேட்டுக்கொண்டார். பாரதியாரின் சின்னஞ்சிறு கிளியே என்னும் பாடலுக்கு செல்வி ஏழிசைபாவை அபிநயம் பிடித்து நடனமாடியது அனைவர் கண்களையும் கலங்க வைத்தது. இதில் கல்லூரி பேரவை பொறுப்பாசிரியர் முனைவர் திருநாராயணசாமி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சசிகுமார், வணிக நிர்வாகிகவியல் துறைதலைவர் முனைவர் குமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரியா, உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரபாகரன், நூலகர் முனைவர் சுப்பிரமணியன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் திருமேனி அவர்கள் நன்றி கூறினார்.


ஆண்டு விழா - 2022


சீர்காழி புத்தூரில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா 22.04.2022 நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.விஜயலட்சுமி அவர்கள் தலைமைதாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்து வரவேற்புரை வழங்கினார். குத்தாலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் விஜயேந்திரன் அவர்கள், கொள்ளிடம் ஒன்றிய குழு பெருந்தலைவர் V.ஜெயப்பிரகாஷ் அவர்கள், கொள்ளிடம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் VRS.பானுசேகர் அவர்கள், கோபாலசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி ராஜேந்திரன் அவர்கள், பட்டிமன்ற பேச்சாளர் பேராவூரணி நீலவேணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் கல்லூரி பேரவை பொறுப்பாசிரியர் முனைவர் திருநாராயணசாமி 2021 முதல் 2022 வரை உள்ள ஆண்டறிக்கை வாசித்தார், தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சசிகுமார், வணிக நிர்வாகிகவியல் துறைதலைவர் முனைவர் குமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரியா, உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரபாகரன், நூலகர் முனைவர் சுப்பிரமணியன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக வணிகவியல் உதவிப் பேராசிரியர் முனைவர் மகேஸ்வரி அவர்கள் நன்றி கூறினார்.


விளையாட்டு விழா - 2022


சீர்காழி புத்தூரில் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விளையாட்டு விழா 23.04.2022 நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் கி.விஜயலட்சுமி அவர்கள் தலைமைதாங்கி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக சீர்காழியின் சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு M.பன்னீர்செல்வம் அவர்கள் கலந்துகொண்டு மாவட்ட, மாநில மற்றும் இந்திய அளவில் பதக்கங்கள் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டிபேசி பரிசு வழங்கினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக உடற்கல்விதுறை பேராசிரியர் முனைவர் K.V.பாலமுருகன் அவர்கள், மனவள பயிற்றுனர் L.பாபுநேசன், ஓய்வு பெற்ற அஞ்சல் ஊழியர் சாமிகணேசன் , கண்ணையன் , மயிலாடுதுறை அமைச்சர் கபடி கழக செயலாளர் ஜே.ஹென்ரி, உடற்கல்வி ஆசிரியர்கள் செல்லத்துரை , ரஜினி , ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதில் இக்கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முனைவர் பிரபாகரன் விளையாட்டுத்துறையில் 2021 முதல் 2022 வரை சாதித்த மாணவ மாணவிகள் விபரங்களை ஆண்டறிக்கையாக வாசித்தார். பேரவை பொறுப்பாசிரியர் வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் திருநாராயணசாமி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சசிகுமார், வணிக நிர்வாகிகவியல் துறைதலைவர் முனைவர் குமார், கணிதத் துறை தலைவர் முனைவர் சாந்தி, கணினி அறிவியல் துறை தலைவர் முனைவர் பிரியா, நூலகர் முனைவர் சுப்பிரமணியன் மற்றும் இருபால் பேராசிரியர்கள் அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முதலாவதாக ஆங்கிலத் துறை உதவி பேராசிரியர் முனைவர் சத்தியமூர்த்தி வரவேற்புரை வழங்கினார், நிகழ்வில் சீர்காழி மாஸ்டர் தினேஷ்யின் மாவீரன் சிலம்பாட்ட குழு இளம் சிலம்ப வீரர்கள் 50பேர் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றினார்கள். இறுதியாக தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் கணேசன் அவர்கள் நன்றிகூற விழா இனிதே நிறைவுற்றது.




Activities during the Academic Year 2021-2022

Red Ribbon Club organized "Celebrating Life" (23-03-2022)

"Celebrating Life" function organised by the Red Ribbon Club of PSPT MGR Govt. Arts & Sci. College, Sirkali on 23.03.2022. Dr.B.Ashok, RRC coordinator welcomed the gathering and Dr. K.Vijayalakshmi, Principal gave the presidential address. Mr.Vinoth ICTC counsellor delivered a special address. More numbers of RRC volunteers participated in the function.


Red Ribbon Club_23032022_120114 Red Ribbon Club_23032022_120312 Red Ribbon Club_23032022_120641 Red Ribbon Club_23032022_120941 Red Ribbon Club_23032022_121036 Red Ribbon Club_23032022_124122 Red Ribbon Club_23032022_122023 Red Ribbon Club_23032022_120723

Blood donation camp (25-03-2022)

Blood donation camp and Interactive Session with students by Dr. P.ArunRajkumar, was held on 25.03.2022 in our college. The programme was organised by the Red Ribbon Club. More than 35 students donated blood voluntarily. The Medical officer explained to the students how HIV will spread and what are the preventive measures to be taken. Dr. K.Vijayalakshmi, Principal, presided over the function. The RRC coordinator, Dr.B.Ashok arranged the blood donation camp.


blood(2) blood(3) blood(4) blood(5) blood(6)